Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: முதல் ஒளிபரப்புக் காணும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ: முதல் ஒளிபரப்புக் காணும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

917
0
SHARE
Ad

 

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ மேலும் அதிகமான உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக முதல் ஒளிபரப்புச் செய்கிறது. வானொலி, சமூக ஊடகத் தளங்கள் மற்றும் SYOK செயலி உட்பட ராகாவில் இடம்பெறும் நல்ல காலம் பொறந்தாச்சு எனும் புதியப் பொங்கல் பாடலையும் அனைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கலாம்.

பின்வரும் உள்ளூர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:

#TamilSchoolmychoice


• ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் ஜனவரி 13, இரவு 9 மணிக்கு நேரலையாக ஒளியேறும் உயர்தர உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் திறமையாளர்களைக் கொண்டாடும் முதல் உலகம் விருதுகள்.

• புகழ்பெற்ற உள்ளூர் இயக்குநர் கார்த்திக் ஷாமலன் இயக்கிய,  பிரபல உள்ளூர் கலைஞர் விகடகவி எனும் மகேந்திரன் ராமன் தொகுத்து வழங்கும் விறுவிறுப்பான விளையாட்டு நிகழ்ச்சி, ஜாலியானா ஒரு பொங்கல்.

டத்தோ கீதாஞ்சலி ஜி, யுவராஜ் கிருஷ்ணசாமி, பாஷினி சிவகுமார், ரவீன் ராவ் சந்திரன், டிஷாலனி ஜாக் என ‘கல்யாணம் 2 காதல்’ சீசன் 2 தொடரில் நடித்தப் பல உள்ளூர் நட்சத்திரங்கள் இவ்விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பர். ஜனவரி 14, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஜாலியானா ஒரு பொங்கல் நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.


• உள்ளூர் இயக்குநர் சதீஷ் நடராஜன் இயக்கிய மற்றும் பிரபல உள்ளூர் கலைஞர்களான டேனேஸ் குமார் மற்றும் உதயா (ராகா) தொகுத்து வழங்கும் வேடிக்கையான விளையாட்டு நிகழ்ச்சி, அட்டகாச பொங்கல்.

ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, ரேவதி மாரியப்பன், யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் கிருத்திகா நாயர் உள்ளிட்ட உள்ளூர் பிரபலங்களுக்கு இடையே ஏற்படும் வேடிக்கையான மற்றும் தீவிரமானப் போட்டியை இந்த நிகழ்ச்சிச் சித்தறிக்கும். ஜனவரி 15, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் அட்டகாச பொங்கல் நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.


• உள்ளூர் திறமையாளரான டவின். ஆர் இயக்கிய ராம் லீலா லாக்டவுன் எனும் நாடக டெலிமூவியில் உள்ளூர் கலைஞர்களானக் குபேன் மற்றும் ஹேமாஜி ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 16, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ராம் லீலா லாக்டவுன் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

வாடிக்கையாளர்கள் ஜனவரி 15-இல் முதல் ஒளிபரப்புக் காணும் பின்வரும் நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்:

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் இரவு 7 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணும் சிங்கப்பூர் குடும்ப டெலிமூவி, அன்பே ஆருயிரே; மதுரை முத்து, தங்கதுரை, மணிமேகலை மற்றும் பலர் பங்கேற்கும், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202)-இல் இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணும் நகைச்சுவை விவாத நிகழ்ச்சி, காமெடி மன்றம்.

ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாகவும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

வானொலி நிகழ்ச்சிகளில் கவிமாறன், யாஷினி, ஜெய், கோகு, சுரேஷ், ரேவதி, உதயா மற்றும் சந்தோஷ் லோகேந்திரன் ஆகியோர் பாடிய, வானொலி, SYOK செயலி, ராகாவின் யூடியூப் அலைவரிசை மற்றும் முகநூல்-இல் கிடைக்கப் பெறும் நல்ல காலம் பொறந்தாச்சு எனும் மனதை வருடும் ராகாவின் பிரத்தியேகத் பொங்கல் பாடலை அனைத்து மலேசியர்களும் கேட்டு மகிழலாம்.

உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் ‘பொங்கல்’ சமையல் போட்டியை ராகாவின் சமூக ஊடகங்கள் வழியாக ராகா இரசிகர்கள் கண்டு மகிழலாம். மேல் விபரங்களுக்கு ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.