Home நாடு ஹக்கா மாண்டின் குடியிருப்பு விவகாரம்: பிஎஸ்எம் பொதுச்செயலாளர் அருட்செல்வன் உட்பட 11 பேர் கைது!

ஹக்கா மாண்டின் குடியிருப்பு விவகாரம்: பிஎஸ்எம் பொதுச்செயலாளர் அருட்செல்வன் உட்பட 11 பேர் கைது!

549
0
SHARE
Ad

arul-psmநெகிரி செம்பிலான், செப் 30 – நெகிரி செம்பிலானில் உள்ள கம்போங் ஹக்கா மாண்டின் குடியிருப்பு பகுதியை கட்டுமான நிறுவனம் இடிக்க முயன்ற போது அதை தடுத்து நிறுத்திய 5 குடியிருப்பாளர்கள் மற்றும் 7 போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்தது.

இந்த சம்பவத்தில் குடியிருப்புக்காரர்களில் ஒருவர் காயமடைந்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிஎஸ்எம் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வனும்(படம்) கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று காலை சுமார் 90 குடியிருப்புக்காரர்கள் நெகிரி செம்பிலானில் உள்ள அந்த பகுதியில் கூடி, கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று கட்டுமான நிறுவனத்திடமும், காவல்துறையிடமும், சட்டத்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து அங்கு கூச்சல் குழப்பங்கள் நிலவியது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, கட்டிடத்தை இடிக்க விடாமல் தடுத்த அந்த குடியிருப்புப் பகுதியின் தலைவர் மற்றும் சில போராட்டவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம், ஹக்கா மாண்டின் குடியிருப்பு மக்கள் அனைவரும் அங்கிருந்து  வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் தாங்கள் அந்த பகுதிகள் கடந்த ஆறு தலைமுறைகளாக வாழ்வதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேற முடியாது என்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகக்து.