அக்டோபர் 5 – இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் கழுத்து வலியால் அவதிப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. காரணம் முறையற்ற நமது செயல்பாடுகள் தான். நாற்காலியில் உட்காரும் போதும், மெத்தையில் படுக்கும் போதும் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த கழுத்து வலிப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது போன்ற தொடர் கழுத்துவலியை அலட்சியப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
கழுத்துவலி வராமல் தடுக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ…
செய்யக்கூடாதவை
கழுத்தை தவறாக உபயோகிக்கிறதை நிறுத்தணும். கழுத்து சுளுக்கு போன்றவற்றிற்கு மசாஜ் ஒரு தற்காலிக நிவாரணம் தந்தாலும், நரம்பு பாதிப்பு, சதைத்தெறிப்பு, போன்றவற்றை உண்டு பண்ணி பெரிய பிரச்சனைகளையும் அதன் தொடர்சியான வலியையும் கொடுக்கும்.
குழந்தைகள் படுத்துகொண்டே தொலைக்காட்சியைப் பார்ப்பது, படிப்பது, பயணம் செய்யும் போது உட்கார்ந்துகொண்டே தூங்கறதெல்லாம் வலியை அதிகரிக்கும். மருத்துவர்கள் ஆலோசனைகள் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கக்கூடாது.
செய்யக்கூடியவை
கழுத்து தசைகளை பலப்படுத்தற பயிற்சிகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி செய்யலாம். தூங்கும் போது 10 செமீ உயரம் உள்ள தலையணை உபயோகிக்க வேண்டும். தலையணை இல்லாமல் படுக்கறது சில சமயங்களில் கழுத்தோட நரம்புகளில் அழுத்தம் ஏற்படுத்தலாம்.
கணினியின் திரை கண்களை விட 20 டிகிரி தாழ்வாகவும், கண்களில் இருந்து 20 அங்குலம் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும்.