Home வணிகம்/தொழில் நுட்பம் 50 புதிய சந்தைகளில் ஆப்பிள் ஐபோன் வெளியீடு !

50 புதிய சந்தைகளில் ஆப்பிள் ஐபோன் வெளியீடு !

442
0
SHARE
Ad

iphone-5sஅக் 10- புதிய  ஐபோன் மாதிரிகள் ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட  50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 1 தொடங்கி விற்பனைக்கு வரவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 25 தொடங்கி ஐபோன் 5S மற்றும் 5C வகை செல்பேசிகள் 35 நாடுகளிலும், வரும் நவம்பர் 1 தொடங்கி 16 நாடுகளிலும் விற்பனைக்குச் செல்லும் என ஐபோன் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளில் கடந்த மாதம் புதிய ஆப்பிள் செல்பேசிகள் விற்பனைக்கு வந்தது. விற்பனை தொடங்கி முதல் மூன்று நாட்களிலேயே  ஒன்பது மில்லியன் மதிப்பு விற்பனையை  ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியது.

#TamilSchoolmychoice

தற்போது சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுள் ஆண்ட்ராய்ட் மென்பொருளுடன் போட்டியிடும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது  தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப குறைந்த விலைக்கு மாற்றியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 5C-யை குறைந்த விலையில் விற்பனை செய்வதன்வழி ஐபோன் நிறுவனம் தனது பங்கு இழப்புகளை தற்காத்துக் கொண்டு வருகிறது.