Home அரசியல் நாட்டில் சிறுபான்மையின மக்கள் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும் – மகாதீர் கருத்து

நாட்டில் சிறுபான்மையின மக்கள் கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும் – மகாதீர் கருத்து

524
0
SHARE
Ad

mahathir 1கோலாலம்பூர், அக் 10 – மலேசியாவில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் நாட்டிலுள்ள செல்வங்கள் சமமாக சேர்வதற்கு சிறுபான்மையின மக்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பூமிபுத்ராக்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த பல திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசிய மகாதீர், அது போன்ற கொள்கைகள் பூமிபுத்ராக்களின் வாழ்வில் ஒரு நீண்ட கால நிலைப்புத்தன்மையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

மேலும், நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் கொஞ்சம் தியாகம் செய்வதன் மூலம் பெரும்பான்மையின மக்கள் அதிருப்தியாவதையும், கடந்த 1969 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி நடந்தது போல் கிளர்ச்சியையும் தடுக்கலாம் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பெரும்பான்மையின மக்களின் அதிருப்தியையும், கிளர்ச்சியையும் தடுக்க வேண்டுமானால் சிறும்பான்மையின மக்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். நஜிப் அறிவித்திருக்கும் திட்டத்தின் நோக்கம் நாட்டின் செல்வ வளங்களை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளித்தல் ஆகும். இது ஒரு நல்ல திட்டம்” என்று இன்று செராஸில் விரைவு ரயில் பாதை கட்டுமானப்பணிகளைப் பார்வையிட வந்த போது செய்தியாளர்களிடம் மகாதீர் கூறினார்.

மலேசியப் பிரதமராக 22 ஆண்டுகள் இருந்த டாக்டர் மகாதீர், பொதுத்தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் ஆட்சி குறித்து நல்ல கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.