Home கலை உலகம் நஸ்ரியா சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு!

நஸ்ரியா சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு!

663
0
SHARE
Ad

dhanush-nazriya-nazim_138026624590சென்னை, அக் 10- ‘நய்யாண்டி’ படம் தொடர்பாக நடிகை நஸ்ரியாவுக்கும், டைரக்டர் சற்குணத்திற்கும் இடையே  ஏற்பட்ட பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழில் வளர்ந்து வரும் நடிகை நஸ்ரியா நசீம், நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் சமீபத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது சற்குணம் இயக்கத்தில், தனுஷ் ஜோடியாக நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 11ம் தேதி (நாளை) வெளியிடபடவுள்ளது.இப்படத்தில் வரும், “இனிக்க இனிக்க…” பாடல் காட்சிகளில், நஸ்ரியா நசீம் ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் நடித்த காட்சி விளம்பர முன்னோட்டமாக வெளியிடப்பட்டது.

இதைப் பார்த்த நஸ்ரியா, தாம் ஆபாசமாக நடிக்கவில்லை என்றும் வேறொரு பெண்ணை வைத்து அக்காட்சியைப் படமாக்கி   பட விளம்பரத்திற்காக இயக்குனர் மோசடி செய்து விட்டார் என்று  நடிகர் சங்கத்திடம் புகார் செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். ஆனால் இதுபற்றி சற்குணத்திடம் கேட்டப்போது நஸ்ரியா, சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி வருவதாக கூறினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் சென்னை போர்பிரேம்ஸ் தியேட்டரில் நேற்று(அக், 9ம் தேதி) நய்யாண்டி படம் திரையிட்டு காட்டப்பட்டது. இதனை நடிகை நஸ்ரியா, அவரது தந்தை, வழக்கறிஞர் மற்றும் இணைய குற்றபுலணாய்வு  காவல் அதிகாரி ஆகியோருடன் சற்குணம் மற்றும் நய்யாண்டி படத்தின் தயாரிப்பாளரும் பார்த்தனர்.

அதில் நஸ்ரியா, கவர்ச்சி என்று சொல்லும் காட்சி, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, போலியாக  யாரையும் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானது. மேலும் அந்த ஆபாசக் காட்சி முன்னோட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.