Home நாடு குகன் வழக்கு: நவம்பர் 29 ல் தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் முடிவு!

குகன் வழக்கு: நவம்பர் 29 ல் தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் முடிவு!

570
0
SHARE
Ad

kuhanஷா ஆலம், அக் 10- தடுப்புக் காவலில் மரணமுற்ற ஏ.குகனுக்கு காயம் ஏற்படுத்தியதற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னால் காவல்துறை அதிகாரியான வீ.நவிந்திரனின் மேல் முறையீட்டுத் தீர்ப்பை நவம்பர் 29 இல் வழங்க உயர் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.

நீதிபதி சூங் சியூவ் ஹிம் இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நேற்று அம்முடிவை அறிவித்தார்.

குகனுக்கு கடுமையான காயமேற்படுத்தியதாகவும் மேலும் இரு குற்றங்களும் கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நவிந்தரன் (வயது 33) மீது சாட்டப்பட்டன. தற்காப்பு வாதத்திற்கு அழைக்கப்படாமலேயே அமர்வு நீதிமன்றம், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நவிந்தரனை எல்லா குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.

#TamilSchoolmychoice

அரசுத் தரப்பின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் , அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதிக்கு மாற்றியது. வழக்கு மீண்டும் அமர்வு நீதிமன்றத்திற்கு  அனுப்பப்பட்ட்து.

காயம் விளைவித்த்தாக சாட்டப்பட்ட இரு குற்றங்களுக்கு தற்காப்பு வாதம் புரியுமாறு நவிந்தரனுக்கு ஆணை இடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவிந்தரன் குற்றவாளி என அமர்வு நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி முடிவு செய்து அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டணை விதித்தது.

குகன் பல விலை உயர்ந்த கார்கள் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டில் தடுப்புக் காவலில் இருந்தார். சுபாங் ஜெயா, யூஎஸ்கே விலுள்ள தாய்பான் காவல் நிலையத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் உயிரிழந்தார்.