Home இந்தியா நவராத்திரி விழா நெரிசலில் 90 பேர் பலி !

நவராத்திரி விழா நெரிசலில் 90 பேர் பலி !

606
0
SHARE
Ad

INDIA-ACCIDENT-STAMPEDEபோபால், அக் 14- மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளாதேவிகோவில் உள்ளது. இங்கு நவராத்திரி பூஜை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த வருட நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள் கோவிலின் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பக்தர்கள் இன்று கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலிசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அப்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் 90 பேர் உயிரிழந்ததாக போலிசார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. சம்பவப் பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் பாதிக்கப்பட்டோர்களை உடனடியாக தட்டியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.