Home உலகம் சாலமன் தீவில் மீண்டும் நிலநடுக்கம், மூன்று கிராமங்கள் அழிந்தன!

சாலமன் தீவில் மீண்டும் நிலநடுக்கம், மூன்று கிராமங்கள் அழிந்தன!

638
0
SHARE
Ad

img1130209005_1_1

சாலமன், பிப்.9- சாலமன் தீவில் நேற்றமீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட சுனாமி மற்றும் இந்த நிலநடுக்கத்தில் அங்கு மூன்று கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.

சுனாமியின் கோரத் தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட சாலமன் தீவில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கத்தில் அந்தப் பகுதியில் உள்ள சான்டாகுருஸ் தீவில் மூன்று கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.

சில தினங்கள் முன்பு எற்பட்ட சுனாமி பாதிப்புகளிலிருந்து மீளாத சாலமன் தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அம்மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது. சுனாமி பாதிப்பில் ஆறு பேர் உயிரிழந்த ந்லையில், அங்கு தற்போது மீட்பு பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.