Home கலை உலகம் மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்

மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்

1047
0
SHARE
Ad
index
சென்னை, பிப்.9- மணிரத்னம் (படம்) இயக்கிய கடல் படம் வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும் ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமானார்கள். அர்ஜுன், அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.
இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறினர். மணிரத்னத்திடம் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டும் வற்புறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் வீட்டில் முற்றுகையிட முடிவு செய்தனர்.
அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் மணிரத்னம் வீடு உள்ளது. தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமும் அங்கு செயல்படுகிறது.
விநியோகஸ்தர்கள் பலர் இன்று பகல் இந்த வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  இதையடுத்து மணிரத்னம் வீட்டில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.