Home அரசியல் விவாதத்திற்கு வாருங்கள் என நுருல் இசா, ராஜா நோங் சிக்கிற்குச் சவால்

விவாதத்திற்கு வாருங்கள் என நுருல் இசா, ராஜா நோங் சிக்கிற்குச் சவால்

877
0
SHARE
Ad

index

கோலாலம்பூர்,பிப்.9- லெம்பா பந்தாய் தொகுதியில் நிலவுகின்ற வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தவறி விட்டதாக கூறப்படுவது மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ஜைனல் அபிடினுக்கு பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி  நுருல் இசா அன்வார் சவால் விடுத்துள்ளார்.

“லெம்பா பந்தாயில் தமது வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதாக அவர் கருதுவதால் விவாதத்திற்கான இந்த சவாலை அவர் எளிதாகவும் விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நாங்கள் இருவரும் என்ன சொல்கிறோம் என்பதை செவிமடுப்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்,” என நுருல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டுக்கு லெம்பா பந்தாய் தொகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு மீண்டும் சாயம் பூசுவதற்குத் தாம் கொடையாளர்களைக் கண்டு பிடித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

வரும் தேர்தலில் முதல் முறையாக எம்பி -யாகியுள்ள நுருலை எதிர்கொள்ள அவர் அச்சப்படுகிறாரா என ராஜா நோங் சிக்-கிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர் “நுருல் இசாவாக இருந்தாலும் அல்லது அன்வார் இப்ராஹிமாக இருந்தாலும் நான் கவலைப்படவில்லை !” என புன்னகையுடன் கூறினார்.

தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரம் எந்திரம் தேர்தலுக்குத் தயாராகி விட்டது என்றும் அவர் சொன்னார்.