Home One Line P1 தெங்கு ஜாப்ருல் லெம்பா பந்தாயில் போட்டியிடுவதை அம்னோ விரும்பவில்லை

தெங்கு ஜாப்ருல் லெம்பா பந்தாயில் போட்டியிடுவதை அம்னோ விரும்பவில்லை

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லெம்பா பந்தாய் அம்னோ கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள், கட்சி மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர். பெர்சாத்துவை பிரதிநிதித்து நிதி அமைச்சர் தெங்கு ஜாப்ருல் அங்கு போட்டியிடக் கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

லெம்பா பந்தாய் அம்னோ உறுப்பினர்களை மேற்கோள் காட்டி மலேசிய இன்சைட் வெளியிட்டுள்ள செய்தியில், தெங்கு ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸை 15 -வது பொதுத் தேர்தலில் களமிறக்க விரும்புவதாக வெளிவந்த வதந்திகளை அது நிராகரிப்பதாகக் கூறியது.

லெம்பா பந்தாய் அம்னோ பிரிவு தலைவர் ராம்லான் அஸ்கோலானி கூறுகையில், பெர்சாத்து -பாஸ் உடன் ஒப்பிடும்போது அடிமட்ட தேர்தல் இயந்திரங்களின் வலிமையைக் கட்சிக் கொண்டுள்ளது. உண்மையில், பெர்சாத்துவுடன் ஒப்பிடும்போது அம்னோவில் ஐந்து மடங்கு கிளைகள் உள்ளன. பெர்சாத்துவில் 10 கிளைகளுக்கு மேல் இல்லை,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் மூன்று முறை தோற்றோம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் உண்மையில் தேசிய பிரச்சனைகள் காரணமாக நாங்கள் தோற்றோம்,” என்று அவர் கூறினார்.

அம்னோ இப்பகுதியில் இன்னும் வலுவாக உள்ளது என்று ரம்லான் கூறினார். பிகேஆர் மற்றும் பாஸ் இடையேயான மூன்று முனைப் போட்டியில் கட்சி இரண்டாவது இடத்தில் 5,000- க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியா இன்சைட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து, தெங்கு ஜாப்ருல் லெம்பா பந்தாயில் பல்வேறு வருகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.