Home One Line P1 ஜெப்ரி கித்திங்கானுக்கு கொவிட்-19 தொற்று

ஜெப்ரி கித்திங்கானுக்கு கொவிட்-19 தொற்று

551
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா துணை முதல்வர் ஜெப்ரி கித்திங்கான் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

மாநில வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் கித்திங்கான் ஞாயிற்றுக்கிழமை அவர் கொவிட் -19 பரிசோதனைக்குப் பின்னர் நேர்மறையானதாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அவரது பத்திரிகை செயலாளர் அர்லின்சியா அகாங் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மற்றும் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“தொற்றுக்கு ஆளானபோதிலும், அவர் காணொலிகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற வழிகள் மூலம் துணை முதல்வர் மற்றும் வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக தனது பொறுப்புகளை நிறைவேற்றுவார்,” என்றும் அவரது பத்திரிகை செயலாளர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் செப்டம்பர் 29 அன்று முதல்வராக பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு கொவிட்-19 தொற்றுக்கு ஆளானர்.