Home One Line P1 வெள்ளம்: பகாங்கில் 17,000 பேர் பாதிப்பு

வெள்ளம்: பகாங்கில் 17,000 பேர் பாதிப்பு

496
0
SHARE
Ad

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,104 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 242 தற்காலிக வெளியேற்ற மையங்களில் (பிபிஎஸ்) அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜோகூர் இன்று காலை 7.30 நிலவரப்படி 5,485 பேர் பாத்க்கப்பட்டுள்ளனர். இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் குறிக்கிறது.

இருப்பினும், ஏழு மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று ஜோகூர் சுற்றுச்சூழல், சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

திரெங்கானுவில், 330 குடும்பங்களைச் சேர்ந்த 1,074 பேர் இன்று காலை 8 மணி நிலவரப்படி, 12 வெளியேற்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முஹால்லிம், ஹிலீர் பேராக், கம்பார் மற்றும் கோலா கங்சார் மாவட்டங்களைச் சேர்ந்த 1,237 பேர் இன்று காலை 8 மணி நிலவரப்படி பேராக்கில் 13 வெளியேற்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் நாடளவில் ஒரு சில மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.