Home One Line P1 அனுவார் மூசா தேமு பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்

அனுவார் மூசா தேமு பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்

536
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசாவை அக்கூட்டணி நீக்கியுள்ளது.

“அவர் முபாக்காட் நேஷனல் செயலகத்தில் அம்னோவின் பிரதிநிதியாகவும் நீக்கப்பட்டார்,” என்று எப்எம்டி தெரிவித்தது.

தேசிய கூட்டணி, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு சாதகமாக பேசி வந்ததை அடுத்து அனுவார் மூசா அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தினார். மேலும், தம்மை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமானால் நீக்கட்டும் என்று அவர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மலாய் கட்சிகள் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கங்களிடையே ஒத்துழைப்பைப் பேணுவதற்காக அவர் விலக தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

முன்னதாக, பாசிர் புத்தே அம்னோ இளைஞர் தலைவர் முகமட் சைபுல்லா அலி, அம்னோ தலைமையை கூட்டரசுப் பிரதேச அமைச்சரான அனுவாரை கட்சியில் இருந்து நீக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பெர்சாத்து செய்தித் தொடர்பாளராக அவர் செயல்படுவது போல இருப்பதால் , அனுவார் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபுல்லா கூறினார்.

முன்னதாக, ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட்டும் அனுவாரை விமர்சித்திருந்தார்.

அனுவாருக்கு பதிலாக தேசிய முன்னணி பொதுச்செயலாளராக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் நியமிக்கப்படுவார்.