Home One Line P1 15-வது பொதுத் தேர்தல்: கிளந்தானில் அம்னோ, பெர்சாத்துவை எதிர்த்து போட்டியிடும்

15-வது பொதுத் தேர்தல்: கிளந்தானில் அம்னோ, பெர்சாத்துவை எதிர்த்து போட்டியிடும்

422
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிளந்தான் அம்னோ மாநிலத்தில் பெர்சாத்துவை எதிர்த்து எதிர்கொள்ளும். ஆனால், 15- வது பொதுத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் போட்டியிட பாஸ் கட்சியை தனியாக விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.

“நாங்கள் இன்னும் பாஸ் உடன் தொடர முடியும், ஆனால் அம்னோ- பெர்சாத்து உடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நிராகரிக்கிறோம். அதாவது அம்னோவுக்கு சொந்தமான எந்த இடங்களிலும் பாஸ் போட்டியிடக்கூடாது, ” என்று மாநில கட்சித் தலைவர் அகமட் ஜஸ்லான் யாகூப் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெர்சாத்து உடன் தொடர்ந்து பணியாற்றினால், கிளந்தான் அம்னோ, பாஸ் உடனான கட்சியின் உறவையும் மதிப்பாய்வு செய்யும் என்று ஜஸ்லான் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் இன்னும் பெர்சாத்து உடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், பாஸ் உடனான எங்கள் உறவை நாங்கள் மீண்டும் சரிப்பார்க்க வேண்டும். அதாவது அவர்கள் எங்களை மறைமுகமாக நிராகரித்தார்கள் எனத் தெரியவந்தால்,” என்று அவர் கூறினார்.