Home நாடு அன்வார் தேசியத் தலைவருக்கும், நுருல் இசா உதவித் தலைவருக்கும் போட்டி

அன்வார் தேசியத் தலைவருக்கும், நுருல் இசா உதவித் தலைவருக்கும் போட்டி

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார். இதுவரையில் வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதால் அவரே தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அன்வாரின் மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.