Home நாடு பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு அன்வாரின் முன்னாள் உதவியாளர் போட்டி

பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு அன்வாரின் முன்னாள் உதவியாளர் போட்டி

728
0
SHARE
Ad

ஷா ஆலாம் – சிலாங்கூர் கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதாக இதுவரை 3 பேர் அறிவித்துள்ளனர்.

நஜ்வான் ஹலிமி பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளர் ஆவார்.

பினாங்கு செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அபிப் பஹாருடின் மற்றும் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நஸ்ருல்லா நசிர் ஆகியோர் இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக அக்மால் பார்க்கப்படுகிறார். மற்ற இரு வேட்பாளர்களான நஜ்வான் மற்றும் அபிப் ஆகிய இருவரும் அஸ்மின் அலியின் அணியைச் சேர்ந்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

நஜ்வான் அணியில் அவரது இளைஞர் பகுதித் துணைத் தலைவராக மலாக்கா மாநில பிகேஆர்  இளைஞர் பகுதித் துணைத் தலைவர் நக்கியுடின் நஸ்ரின் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ஏறத்தாழ எல்லாப் பதவிகளுக்கும் கடுமையான போட்டிகள் உருவாகியிருக்கின்றன.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ரபிசி ரம்லி அறிவித்திருக்கிறார். நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி எந்தப் பதவிக்குப் போட்டியிடுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.