Home கலை உலகம் சூர்யா – சிவகார்த்திகேயனுக்குப் பாடும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில்

சூர்யா – சிவகார்த்திகேயனுக்குப் பாடும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில்

912
0
SHARE
Ad
மக்கள் இசைப் பாடகர் செந்தில் கணேஷ்

சென்னை – அதிர்ஷ்டமா? திறமையா? நேரமா? அல்லது அனைத்தும் கலந்த ஒரு கலவையின் வெளிப்பாடா?

எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் மக்கள் இசைப் பாடகர் செந்தில் காட்டில்தான் இப்போது இசைமழை. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசை வென்று பரபரப்பு ஏற்படுத்தியவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. எந்தப் படத்தில் யாருக்குப் பாட்டுப் பாடப் போகிறார் என்பதுதான் இப்போது எதிர்பார்க்கப்படும் கேள்வி!

ஆனால் அதற்கும் முன்பாக சிவகார்த்திகேயனின் அடுத்த படமான சீமைராஜா படத்தில் டி.இமான் இசையில் பாடியிருக்கிறார் செந்தில். அவர் பாடி வெளிவரப் போகும் முதல் சினிமாப் பாடலாக இதுதான் திகழும் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அடுத்ததாக, கேவி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 37’ என்ற இன்னும் பெயரிடப்படாத படத்தில் சூர்யாவுக்கான முதல் காட்சிப் பாடலை (ஓபனிங் பாடல்) செந்தில்தான் பாடியிருக்கிறார் என்பது புதிய தகவல். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.