Home அரசியல் நுருலுடன் விவாதம் நடத்துவதை நோங் சிக் நிராகரித்தார்

நுருலுடன் விவாதம் நடத்துவதை நோங் சிக் நிராகரித்தார்

845
0
SHARE
Ad

Raja Nong Chik

கோலாலம்பூர்,பிப்.9-லெம்பா பந்தாய் தொகுதி மக்கள், தங்களுக்கு யார் அதிக உதவி செய்துள்ளார்கள் என்பதை முடிவு செய்வதற்கு தம்முடன் விவாதம் நடத்த வருமாறு அந்தத் தொகுதியின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறைகூவலை அந்தத் தொகுதின் அம்னோ தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் (படம்)  நிராகரித்துள்ளார்.

தேசிய முன்னணி அமைச்சர் என்ற முறையில் எங்களுக்கு விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. “அமைச்சர்கள் விவாதங்களில் பங்கு கொள்வதற்கு ஊக்கமளிக்கப்படவில்லை..”என்றும் அவர் சொன்னார்.

#TamilSchoolmychoice

நுருல் இசா  உண்மையில் அவரது தொகுதிக்கு நன்மை செய்திருந்தால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் ராஜா நோங் சிக் குறிப்பிட்டார்.

“அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னால் போதும். அவர் என்னுடைய சாதனைகளில் சவாரி செய்கிறார்,” என்றார் அவர்.

நுருல் இசா லெம்பா பந்தாய் மக்களுக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் தம்மைக் குறை கூறுவதிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்வதாக தாம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சருமான ராஜா நோங் சிக்-கிற்கு நுருல் இசா நேற்று சவால் விடுத்திருந்தார்.

லெம்பா பந்தாய் தொகுதியை மக்கள் கூட்டணிக்காக  தக்க வைத்துக் கொள்வதற்கு நுருல் மீண்டும் போட்டியிடத் தயாராகும் வேளையில் அந்த முன்னாள் தேசிய முன்னணி தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் நோங் சிக் இறங்கியுள்ளார்.