கோலாலம்பூர்,பிப்.9- பத்துமலை வளாகத்திற்கு அருகே எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாட்டாளர்களான டோலோமைட் நிறுவனம் சிலாங்கூர் அரசாங்கத்திடம் இருந்து எந்த கடிதமும் பெறவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் விற்று முடிந்த நிலையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையால் பலர் கட்டிய முன்பணத்தை திரும்ப கேட்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவ்விடத்தின் கட்டுமானப் பணியால் பத்துமலை முருகன் ஆலயத்திற்கோ, அதன் சுற்று வட்டாரப் பகுதிக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் டோலோமைட் நிறுவனம் தெரிவித்திருப்பதாகவும் தமிழ் நாளேடுகளில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.