Home உலகம் ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம்

523
0
SHARE
Ad

762807c33e6872b69b710b81de7718c9

கந்தகார்,அக்24– ஆப்கானிஸ்தான் நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இதுபற்றி தலிபான் தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிந்தது. அந்த ஆணையும், பெண்ணையும் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர்கள் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய உடல் ஊருக்கு வெளியே கிடந்தது.

இதுபோல கள்ளக் காதலில் ஈடுபட்ட பலரை தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது இருக்கும், ஆண் பற்றிய மற்ற விவரங்கள் தெரிய வில்லை.