Home வணிகம்/தொழில் நுட்பம் ஐஓஎஸ் ஆண்டிராய்டுகளுக்கான பிபிஎம் செயலிகள்: அறிவித்த 8 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பதிவிறக்கங்கள்!

ஐஓஎஸ் ஆண்டிராய்டுகளுக்கான பிபிஎம் செயலிகள்: அறிவித்த 8 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பதிவிறக்கங்கள்!

501
0
SHARE
Ad

bbm-sept18

அக் 24-   ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டுகளுக்கான பிபிஎம் செயலிகள் குறித்து அறிவித்த அடுத்த 8 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிளேக் பெர்ரி நிறுவனம் அறிவித்துள்ளது.

மக்களால் மிக கவரப்பட்டு அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ள இந்த செயலிகள், தற்போது செல்பேசிகளில் நிறுவப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக டிவிட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பிபிஎம்மை இயக்குவதற்கு முன் “எனக்கு மின்னஞ்சல் கிடைத்தது” எனும் பொத்தானை அழுத்தி பின் அதனை இயக்க வேண்டும்.

பிளேக் பெர்ரி செயலிகள் மிக சீரான பயன்பாட்டை கொண்டுள்ளது. எனவே, அந்த செயலிகளை எந்நேரத்திலும் யார் வேண்டுமானாலும் தங்களின் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இருப்பினும், அதனை பதிவிறக்கம் செய்யும் போது அதன் சேவையகம் (Server) பிரச்சனை ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட அளவிலான பதிவிறக்கத்தை மட்டுமே அது நிர்ணயத்துள்ளது.

எனவே, தற்போது iOS-க்கான பிபிஎம்மின் செயலிகள் முற்றிலும் இலவசமாக உங்கள் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.