Home கலை உலகம் கே. பாலசந்தர், கமல்ஹாசன் ஆகியோரை வியக்க வைத்த ‘விழா’ இயக்குனர்

கே. பாலசந்தர், கமல்ஹாசன் ஆகியோரை வியக்க வைத்த ‘விழா’ இயக்குனர்

597
0
SHARE
Ad

Vizha-A-Tuesday-Ad-1

அக் 28- ஜெ.பி. மீடியா டிரீம்ஸ் பிலிம் புரொடக்ஷன் அதிபர்களான கே.ஜி. ஜெயவேல், ஜெ. பாலமுருகன் இருவரின் நிர்வாக தயாரிப்பிலும அசூர் எண்டர்டெயின்ட்மெண்ட் உரிமையாளர் சுனிர் கேடர்பாலும், 126 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ள இராம.நாராயணன் தனது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விழா’.

இப்படம் தமிழ்நாடு மக்களால் பேசப்படுகிற படமாகவும் விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்களால் நேசிக்கின்ற படமாவும் உருவாகி உள்ளது. இப்படத்தின் இயக்குநர் பாரதி பாலகுமாரன் ‘மனது’ குறும்படத்தின் மூலம் கே.பாலசந்தர், கமல்ஹாசன் மற்றும் இன்றைய முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தவர். அவர்கள் பார்த்து வியந்த கதைதான் இன்று ‘விழா’ திரைப்படமாக உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ‘விழா’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய முழுவதும் தனது திறமை நிறைந்த வெற்றிக்கொடியை நிலை நாட்ட வருகிறது. வலிமை நிறைந்த திறமையை முழுவதும் பயன்படுத்தி ஒளிப்பதிவில் சாதனை படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்.

பட்டணம் முதல் கிராமம் வரை தனது இசையின் மூலம் கட்டிப்போட இசை தர்பார் நடத்தி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். படத்தை உயிரோட்டமாக தொகுத்து தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் படத்தொகுப்பாளர்களான பிரவீன். கே.எல் / ஸ்ரீ காந்த் என்.பி. இருவரும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். தனது குரலாலும் நடிப்பாலும் ‘விழா’ வில் வியக்க வைத்துள்ளார். கிராமத்தில் ‘பனை’ வாசிக்கும் இளைஞனாக மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். அழகும் திறமையும் உள்ள மாளவிகாமேனன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளில் உள்ள மக்களும் இதில் ஆர்வகமாக நடித்துள்ளார்கள். மகேந்திரன் காதல் தண்டபாணி, தேனி முருகன், காளி, கல்லூரி வினோத், கல்லூரி கோபால், ஸ்மைல் செல்வா ஆகியோருடன் பிள்ளையார் பட்டி ஜெயலட்சுமி வில்லியாக அராஜகம் புரிந்துள்ளார்.

உச்சக்கட்ட காட்சியாக வரும் கிழவிகளின் அனல் பறக்கும் சண்டைக்காட்சி படத்தின் பலமாவும் வயிறு வலிக்க வைக்கும் நகைச்சுவையாகவும் இருக்கும். ஒவ்வொரு காட்சிகளிலும ஆயிரக்கணக்கான மக்கள் நடித்திருப்பதும், நடித்த நடிகர்கள் அந்தந்த பாத்திரங்களாக மாறியிருப்பதும் ‘விழா’ விற்கு பெரிதும் பலமாக அமைந்திருக்கிறது.

சிரிக்க,  சிரிக்க, வயிறு, வலிக்க, வலிக்க உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘விழா’ !

மணிமொழியன் ராமதுரை கலையையும், வசனம் / இணை இயக்கத்தை ராஜா குருசாமியும் நடன பயிற்சியை பாலாவும் சண்டைபயிற்சியை ஸ்பீடு மோகனும் பாடல்களை மோகன்ராஜ், கார்க்கி, ராஜா குருசாமியும் எழுதி உள்ளனர். இத்தனை கலையம்சத்துடன் உருவாகியுள்ள ‘விழா’ நவம்பரில் உலகமெங்கும் கொண்டாட வருகிறது.