Home இந்தியா ராகுல் மீது நடவடிக்கை:தேர்தல் ஆணையரிடம் பா.ஜ., புகார்

ராகுல் மீது நடவடிக்கை:தேர்தல் ஆணையரிடம் பா.ஜ., புகார்

400
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_72779047490

புதுடில்லி, அக் 29 – மத உணர்வுகளைத் தூண்டி, மத கலவரம் ஏற்படும் வகையில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., தலைவர்கள் நேற்று புகார் அளித்தனர். காங்கிராஸ் துணை தலைவர் ராகுல், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரேதேச மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். அப்போது, சமீபத்தில், மத கலவரம் நடந்த உத்திர பிரேதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார்.

மத கலவரங்களை பா.ஜ., தூண்டி விடுவதாகவும் பேசினார். அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பாக உள்ளது. பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.,வும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மத கலவரத்தை தூண்டும் வகையில் ராகுல் பேசுவதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவேடகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேற்று டில்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து ஆறு பக்க புகார் அறிக்கையை அளித்தனர்.

#TamilSchoolmychoice

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறி மத கலவரத்தை தூண்டும் வகையில் ராகுல் பேசியுள்ளார். தேவையில்லாமல் பா.ஜ., மீதும் பழி சுமத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்த்து.

புகார் அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:காங்கிரஸ்  துணை தலைவர் ராகுலுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர், திக்விஜய் சிங்கிற்கும் வித்தியாசம் உள்ளது. எப்போதும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி கண்டபடி அறிக்கை விடுவதே திக்விஜய் சிங்கிற்கு வேலையாகி விட்டது. எனவே, அவர் கூறுவதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், ராகுலுக்கு பொறுப்பு உள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர். எனவே, வரம்பு மீறி பேசக் கூடாது என முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.