Home இந்தியா இலங்கை காமன்வெல்த் மாநாடு : இந்தியா பங்கேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

இலங்கை காமன்வெல்த் மாநாடு : இந்தியா பங்கேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

643
0
SHARE
Ad

Madras-high-cou29076

சென்னை, அக் 29- இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடைவிதிக்க கோரி மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.