Home இந்தியா மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சியை பிடிக்கும் :கருத்து கணிப்பு

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சியை பிடிக்கும் :கருத்து கணிப்பு

517
0
SHARE
Ad

bjp-flag-_new

புதுடில்லி, அக் 29- மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க.,வே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 61லிருந்து 71 இடங்கள் பெறும் என்றும் காங்கிரஸ் 16லிருந்து 24 இடம் மட்டுமே பெறும் என அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.,வே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அதாவது, பா.ஜ.க.,148லிருந்து 160 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ்க்கு 52லிருந்து 62 இடங்கள்தான் கிடைக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அதாவது பா.ஜ.க.,வுக்கு 44 சதவீத ஓட்டுகளும் காங்கிரஸ் கட்சிக்கு 33 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும்.