Home Featured தமிழ் நாடு நாட்டை கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் – கங்கை அமரன் காட்டம்!

நாட்டை கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் – கங்கை அமரன் காட்டம்!

686
0
SHARE
Ad

gangaiamrarn600ஈரோடு –  நாட்டை கொள்ளையடித்தவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே மாற்றம் தேவை என்று ஈரோட்டில் கங்கை அமரன் பேசினார். ஈரோட்டில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார் இசையமைப்பாளர் கங்கை அமரன்.

பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது, “நாட்டை கொள்ளை அடித்தவர்களும், சுரண்டியவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஓரங்கட்ட ஒரு மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை பா.ஜ.கவால்தான் தர முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய கஙகை அமரன், “திரைப்பட நடிகர்களை பொறுத்தவரை அவர்களும் மனிதர்கள்தான். திரைப்படம் மூலம் நல்ல கருத்துக்களை சொல்லியவர்கள் நடிகர்கள்தான். அதனால் அவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்வது ஒன்றும் தவறானதில்லை”.

#TamilSchoolmychoice

“கூட்டணிக்காக பேரம் பேசப்பட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த பகுதியில் இருந்த காவிரி ஆறு எங்கே என தேடும் அளவிற்கு இருக்கிறது. இதில் கழிவுகள் கலந்து மாசுபட்டிருக்கிறது”.

“இந்த பகுதிக்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு மாற்றம் வரவேண்டும். இங்கிருக்கும் பா.ஜ.க வேட்பாளர்கள் ஜெயித்து இதை நிறைவேற்றுவார்கள்” என்றார் கங்கை அமரன்.