Home வாழ் நலம் தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம்

823
0
SHARE
Ad

diwali-marunthui

அக் 30- தீபாவளி நெருங்கி விட்டது. அனைவரின் வீட்டிலும் இனிப்பு பலகாரங்கள், கை முறுக்குகள் போன்றவற்றை இந்நேரம் செய்து தயார்படுத்தி இருப்பீர்கள்.

தீபாவளியன்று புத்தாடை உடுத்தி காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை உண்பதன் வழி தொண்டை கட்டு வரும். அதோடுமட்டுமல்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கவே  தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது.இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

சரி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

தணியா : 4 கப்

இஞ்சி  : 200 கிராம்

ஓமம்    : 100 கிராம்

சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்

வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)

பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)

நெய் : 1/4 கப்

செய்முறை:

தணியாவை ஊற வைத்து அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இஞ்சியை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்துக் கொள்ளவும். வடிகட்டிய தணியா சாறு, இஞ்சிச் சாறு, சுக்கு மிளகு திப்பிலி பொடி, ஓமம், பொடித்த ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து, வெல்லத்துடன் கலக்கவும்.அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி, பின்னர் நெய் சேர்த்து, சுருள வந்தவுடன் கீழே இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

*அப்புறம் என்ன கவலை வாசகர்களே, தீபாவளி பலகாரத்தை தைரியமாக சாப்பிட்டு ஒரு உருண்டை லேகியத்தை எடுத்து தவறாமல் வாயில் போட்டு கொள்ளுங்கள். தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.