Home வாழ் நலம் அதிகம் தூக்கம் உடலுக்கு நல்லது !

அதிகம் தூக்கம் உடலுக்கு நல்லது !

471
0
SHARE
Ad

lifestyle-top-ten-memory-tips-sleep-getty-590mt040711

நவம்பர் 7- அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்காட் தலைமையிலான குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன் என்ற ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் நன்றாக தூங்கும் போது தான் மனிதனின் மூளை சுத்தம் செய்யப்படுவது தெரியவந்தது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆய்வை விஞ்ஞானி மைகென் நெதர்காட் குழுவினர் சுண்டெலிகளைக் கொண்டு மேற்கொண்டனர் என்பது குறிப்பிட்தக்கது.