Home உலகம் 100 ஆண்டுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 அன்று திருமணம் நடத்த இளைஞர்கள் ஆர்வம்

100 ஆண்டுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 அன்று திருமணம் நடத்த இளைஞர்கள் ஆர்வம்

523
0
SHARE
Ad

11-12-13

நியூயார்க், நவ 6–உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும்.

இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வருகிற நவம்பர் 12–ந்தேதி அல்லது டிசம்பர் 11–ந்தேதி திருமணம் செய்ய பெரும்பாலான ஜோடிகள் ஆர்வமாக இருப்பது தெரிய வந்தது. இது கடந்த 2012–ம் ஆண்டில் அன்றைய கால கட்டத்தில் நடந்த திருமணத்தைவிட 72.2 சதவீதம் அதிகம் என கணக்கிட்டுள்ளது.