Home கலை உலகம் நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்

நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்

501
0
SHARE
Ad

Chitti_Babu

சென்னை, நவம்பர் 7- பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு. ‘ஒற்றன்’, ‘பாய்ஸ்’, ‘பைவ்ஸ்டார்’, ‘தூள்’, ‘சிவகாசி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமானது. சுயநினைவு இன்றிய நிலைக்கு சென்றார்.

#TamilSchoolmychoice

சிட்டிபாபு மூளையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.