Home கலை உலகம் நடிகர் சிட்டிபாபு காலமானார்!

நடிகர் சிட்டிபாபு காலமானார்!

1066
0
SHARE
Ad

Chitti_Babu

சென்னை, நவ 8 – பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு (49) சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாலை காலமானார்.

சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ்’ எனப்படும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4ந் தேதி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.