Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு முகிலன் போட்டி!

ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு முகிலன் போட்டி!

666
0
SHARE
Ad

1312கோலாலம்பூர், நவ 7 –  ம.இ.கா தேர்தலில் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதாக ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத்தலைவரான வி.முகிலன்(படம்) இன்று அறிவித்தார்.

“கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும், தலைமைத்துவத்தை பலப்படுத்துவதிலும் கட்சிக்கு உதவும் நோக்கில் நான் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். கடந்த 2009 ஆம் ஆண்டு இளைஞர் பிரிவுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து எனது பணிகளை நல்லமுறையில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்” என்று இன்று பெர்னாமாவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் முகிலன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில்,இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக ம.இ.கா இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் சி.சிவராஜா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருப்பதையடுத்து அவரை எதிர்த்து முகிலன் அப்பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை ம.இ.கா வின் தேசிய இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் ம.இ.கா தலைவர் சாமிவேலுவை விமர்சித்ததற்காக இரண்டு மத்திய செயலவை உறுப்பினர்களோடு சேர்த்து முகிலனும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கெராக்கான் ஆண்டி சாமிவேலு (Gerakan Anti-Samy Vellu – GAS) என்ற அமைப்பைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் பதவி ஏற்ற பிறகு, முகிலன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.