Home இந்தியா மனச்சாட்சிப்படி பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

மனச்சாட்சிப்படி பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

453
0
SHARE
Ad

karunanidhi -PTI

சென்னை, நவம்பர் 9- பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு; அந்த மனசாட்சிப்படி, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக டில்லி அமைச்சரவையில் என்ன பேசுகின்றனர் என்று, எனக்கு தெரியாது. நாங்கள் ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விட்டோம். வெளியில் இருந்து ஆதரவு என்பது இப்போதைய பிரச்னையல்ல. பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு. அந்த மனசாட்சிப்படி பிரதமர் நடந்து கொண்டால் போதும். “இந்தியாவின் சார்பில் பிரதமரோ, பிறரோ, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது’ என்ற என் வேண்டுகோளை, மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி சென்னையில் அவரது பேட்டியில் கூறினார்.

#TamilSchoolmychoice

இலங்கை தமிழர்களுக்கு, இலங்கை அரசு நடத்திய கொடுமைகளையும், தமிழினத் துடைப்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றையும் கண்டிக்கிற வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று தான் கூறுகிறோம். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு பதில் கூற வேண்டும். வாசன், நாராயணசாமி ஆகியோர் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மத்திய அரசும், பிரதமரும் முடிவெடுப்பர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“காங்கிரஸ் உயர்நிலைக்குழு குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது இந்தியாவின் சார்பில் வேறு யாருமோ அம்மாநாட்டில் பங்கேற்பர் என முடிவெடுப்பார்களேயானால், அதன் விளைவை அந்தக் கட்சி அனுபவித்துத்தான் தீர வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், ஞானதேசிகன் ‘காங்கிரஸ் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. இலங்கை தமிழர் பிரச்னைக்கும், தேர்தலுக்கும், கட்சி அரசியலுக்கும் சம்பந்தமில்லை’ என பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதாக யார் கூறியது? அதற்காக ஞானதேசிகன் போன்றவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

 ஒரு வேளை, “உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கத் தெரியாதவர்கள்’ என, ஏ.கே.அந்தோணி, வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி போன்றோரை மறைமுகமாக ஞானதேசிகன் சுட்டிக் காட்டுகிறோரோ என்னவோ? என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.