Home நாடு நெகிரி செம்பிலானில் நாளை தொழில்நுட்ப வாசிப்பு முகாம்!

நெகிரி செம்பிலானில் நாளை தொழில்நுட்ப வாசிப்பு முகாம்!

811
0
SHARE
Ad

nilainewfstகோலாலம்பூர், நவ 13 – குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை சிறு வயது முதலே ஏற்படுத்த வேண்டும். இது எதிர்காலத்தில் அவர்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக விளங்க உதவும்.

வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும், ஞாபகசக்தியும், கருத்தாழமும், சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் , பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.

வாசிப்புத்திறமை பெற்ற மாணவனுடைய செயல்களும், சிந்தனையும் ஞாபகசக்தியும் வாசிப்புத்திறன் இல்லாத மாணவனின் சிந்தனையில் இருந்து வித்தியாசப்படும்.

#TamilSchoolmychoice

வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமின்றி, சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.

இதனைக் கருத்தில் கொண்டே நாளை 14-ஆம் நவம்பர் 2013 பகல் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ‘தொழில்நுட்ப வாசிப்பு முகாம்’ ஒன்றினை நெகிரி செம்பிலான் மாநில கல்வியியல் தொழில்நுட்ப பிரிவோடு, சிரம்பான் மாவட்டம் கல்வி இலாகாவும் மநிபால் சர்வதேச பல்கலைகழகமும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கிறது.

இம்முகாமிற்கு சுமார் 59 பள்ளிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வாசிப்பின் மூலமே மனிதன் சிறப்படைகின்றான் என்பதனை இம்முகாம் வாயிலாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடக்கவிருக்கின்றனர். இம்முகாம் வாயிலாக குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக் கொள்வதோடு தொழில்நுட்பக் கருவிகளை தங்களின் வாசிப்பிற்கு பயன்படுத்திக் கொள்வர் என்பது திண்ணம்.