Home நாடு “வேதமூர்த்திக்கு எதிராக என்னை ஏன் மாற்றுகிறீர்கள்?” – அட்னான் கேள்வி

“வேதமூர்த்திக்கு எதிராக என்னை ஏன் மாற்றுகிறீர்கள்?” – அட்னான் கேள்வி

596
0
SHARE
Ad

Tengku-adnan-sliderகோலாலம்பூர், நவ 13 – முனீஸ்வரர் ஆலயம் உடைப்பு விவகாரத்தில் தான் கூறிய கருத்துக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ள வேதமூர்த்தியுடன் மேலும் விவாதத்தை வளர்க்க தான் விரும்பவில்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்துள்ளார்.

“என்னை ஏன் வேதமூர்த்திக்கு எதிரானவராக மாற்றுகிறீர்கள்? அவர் அமைச்சரவையில் ஒருவர். நான் யாருக்கு எதிராகவும் இருக்க விரும்பவில்லை” என்று அட்னான் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாஸ் போன்ற கட்சிகள் மதம் அல்லாத விவகாரங்களுக்கு கூட மதத்தை உள் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) அதிரடியாக ஆலயத்திற்கு வந்திறங்கி, ஆலயத்தின் ஒரு பகுதி இடித்துத் தள்ளினர்.

இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த தெங்கு அட்னான் ஆலயத்தின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இனி ஆலயம் அழகுபடுத்தப்பட்டு எழிமிக்க ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் என்ற முறையில் அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து டிபிகேஎல் அதிகாரிகளின் அநியாயமான செயலுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று விமர்சித்தார்.