Home தொழில் நுட்பம் ரெட்டினா திரையுடன் கூடிய புதிய ஐபாட் மினி விற்பனை!

ரெட்டினா திரையுடன் கூடிய புதிய ஐபாட் மினி விற்பனை!

671
0
SHARE
Ad

ipad-mini 300-200

நவம்பர் 13- மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  324 பிபிஐ ரெட்டினா திரையுடன் கூடிய புதிய ஐ பாட் மினி  தற்போது ஆப்பிள் வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்ட  ஐபாட் மினி 7.9 அங்குல ரெட்டினா திரையுடனும், 3.1 மில்லியன் பிக்சலுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. மெல்லிய அளவில் தயாரிக்கப்பட்ட புதிய ஐபாட் மினியில், ஐ சைட்(ISight) மற்றும் பேஸ்டிம் (FaceTime) எனப்படும் எச்டி (HD) அம்சங்களை கொண்ட கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

ஐபோன் 5s-இல் இணைக்கப்பட்டிருக்கும் A7 என்ற சிப் இதிலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐபோன் 5s போன்றே இதன் மின்கலமும் (பேட்டரி)  10 மணி நேரம் வரை தாங்கும்.

புது ஐபாட் மினியில் மிமோ (MIMO) எனப்படும் கம்பியில்லா இணையச் சேவை (wireless) இணைக்கப்பட்டுள்ளது. இது அதிவேகமாக செயல்படக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், மின்னஞ்சல் அனுப்பும் வலை உலாவல், மற்றும் வீடியோ அழைப்புகளை செய்வதற்கான  பயன்பாடுகள் மிக வேகமாக கிடைக்கபெறும்.

அமெரிக்காவில் 16ஜிபி கொண்ட ஐபாட் மினி  399 டாலருக்கும், 32ஜிபி கொண்ட ஐபாட் மினி 499 டாலருக்கும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஐரோப்பா , ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சீனா போன்ற பிற நாடுகளில் புதிய ஐபாட் மினி ,அமெரிக்காவை காட்டிலும் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும்.