Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல்: மோகனா, சிவராஜா வெற்றி!

ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல்: மோகனா, சிவராஜா வெற்றி!

612
0
SHARE
Ad

MIC-logo

கோலாலம்பூர், நவ 16 – இன்று நடைபெற்ற ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தேர்தலில் மோகனா முனியாண்டி மகளிர் பிரிவுத் தலைவியாகவும், சிவராஜா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத்தலைவரான வி.முகிலனும், அவரை எதிர்த்து இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் சி.சிவராஜாவும் நேரடியாகப் போட்டியிட்டனர்.

#TamilSchoolmychoice

இதில் சிவராஜா 270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முகிலன் 234  வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

அதே போல், மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்கு மத்திய செயலவை உறுப்பினர் மோகனா முனியாண்டியும், அவரை எதிர்த்து மகளிர் பிரிவு செயலாளர் எம்.விக்னேஸ்வரியும்  நேரடிப் போட்டியில் இறங்கினர்.

இதில் மோகனா 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விக்னேஸ்வரி 166 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.