Home நாடு 3 வருடங்களாக மகளுடன் தகாத உறவு! தந்தை கைது!

3 வருடங்களாக மகளுடன் தகாத உறவு! தந்தை கைது!

1614
0
SHARE
Ad

rape-video_350_030813120039

பெட்டாலிங் ஜெயா, நவ 21 – கடந்த 3 வருடங்களாக தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சொந்த மகளுடன் தகாத உறவு வைத்திருந்த 46 வயதான தந்தை காஜாங்கில் இன்று கைது செய்யப்பட்டான்.

21 வயதான அந்த பெண்ணிடமிருந்து கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உறவினர் ஒருவர் செல்பேசியை வாங்கிப் பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அதில் அப்பெண்ணின் தந்தையிடமிருந்து வந்த மோசமான குறுஞ்செய்திகளைக் கண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அப்பெண்ணிடம் உறவினர் நீண்ட நேரம் விசாரித்த போது, அப்பெண் தன் தந்தையுடனான உறவு குறித்து ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் உடனடியாக அப்பெண்ணின் தாயாரிடம் அவளை அழைத்துச் சென்ற உறவினர், காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் தந்தை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 376A வின் கீழ் அவருக்கு 6 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இவ்வழக்கின் படி, தந்தையுடன் தகாத உறவு கொண்ட அப்பெண்ணிற்கும் தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.