Home வாழ் நலம் கண்ணுக்கு கீழ் கரு வளையமா ?

கண்ணுக்கு கீழ் கரு வளையமா ?

464
0
SHARE
Ad

946428_128390157366867_646056154_n-1

கோலாலம்பூர், நவ 22- சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம்.

வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும். பின், ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி 30 நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.  கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

#TamilSchoolmychoice

சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.