Home உலகம் இளம் வயதில் சம்பாதிப்பதில் இந்தியர்களை மிஞ்சும் சீனர்கள்

இளம் வயதில் சம்பாதிப்பதில் இந்தியர்களை மிஞ்சும் சீனர்கள்

389
0
SHARE
Ad

8885395

வாஷிங்டன், நவம்பர் 22- குறைந்த வயதில் அதிக கோடீஸ்வரர்களை உடைய நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான பட்டியலில் 515 கோடீஸ்வரர்களுடன்  அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.

இந்தியாவை சேர்ந்த 103 கோடீஸ்வரர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சராசரி வயதின் அடிப்படையில் எந்த நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்கள் இளம் வயதினர் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவில் மொத்தம் 157 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களின் சராசரி வயது 53. இவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் சொந்த உழைப்பில் சொத்துக்களை சம்பாதித்துள்ளனர். ஐந்து சதவீதம் பேர்  பரம்பரை சொத்தின் மூலம்  இந்த பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர்  தங்களுக்கு கிடைத்த பரம்பரை சொத்தை பலமடங்கு பெருக்கி கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொந்த உழைப்பில் சொத்து சேர்த்துள்ளனர். 19 சதவீதம் பேர் பரம்பரை சொத்துக்களின் அடிப்படையில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். மீதமுமள்ள 34 சதவீதம் பேர் பூர்வீக சொத்துக்களை தங்கள் உழைப்பின் மூலம் பெருக்கி கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்களின் சராசரி வயது 63 ஆக உள்ளது. இது இந்தியர்களை விட சீனர்கள் குறைந்த வயதில் அதிகம் பணம் ஈட்டும் திறன் பெற்றிருப்பதை காட்டுகிறது. அமெரிக்க கோடீஸ்வரர்களின் சராசரி வயது 67 ஆகவும், கனடாவை சேர்ந்த கோடீஸ்வரர்களின் சராசரி வயது 66 ஆகவும் உள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக, ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் சராசரி வயது 57 ஆக உள்ளது. உலக அளவில் கோடீஸ்வரர்களின் சராசரி வயது 62 வயதாக உள்ளது.