Home கலை உலகம் சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ டிசம்பர் 20-ல் வெளியீடு !

சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ டிசம்பர் 20-ல் வெளியீடு !

458
0
SHARE
Ad

jk-nanbanசென்னை, நவம்பர் 29 – தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்பட இயக்கத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

பொக்கிஷம் திரைப்படத்துக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படமான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ வருகின்ற டிசம்பரில் 20ஆம் தேதி வெளியீடு காண்பதாக நடிகர் மற்றும் இயக்குநரான சேரன் தனது பேஸ்புக் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக சர்வானந்த்தும், நாயகியாக நித்யாமேனனும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜெயபிரகாஷ், கிட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக இயக்குநர் சேரன் பல முயற்சிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.