Home உலகம் 2020-ம் ஆண்டின் உலக வர்த்தக கண்காட்சி நடத்த துபாய் தேர்வு

2020-ம் ஆண்டின் உலக வர்த்தக கண்காட்சி நடத்த துபாய் தேர்வு

489
0
SHARE
Ad

d21cbd0f-127d-426f-8730-f630469769e5_S_secvpf

பாரிஸ், நவம்பர் 29- வரும் 2020 ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சியை நடத்த உள்ள நாட்டினைத் தேர்வு செய்யும் கூட்டம் பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த யேகடரின்பர்க், பிரேசிலின் சாவ் பாவ்லோ, துருக்கியின் லிஸ்மிர் மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் போட்டியில் இருந்தன. இறுதித் தேர்வில் ரஷ்யாவை விட அதிக வாக்குகள் பெற்ற துபாய், கண்காட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கோலாகலமான வாணவேடிக்கை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வர்த்தகக் கண்காட்சியை நடத்தும் முதல் மத்தியக் கிழக்கு நாடு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கு பெறும் நூற்றுக்கணக்கான நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்ப உத்திகளையும், கட்டிடக் கலைத்திறனையும் சந்தைப் படுத்துவார்கள்.

துபாயில் ஆட்சி புரியும் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்த கண்காட்சியை நடத்துவதில் உலகையே அசத்த விருப்பதாகக் கூறினார். மத்தியக் கிழக்கு நாடுகளின் கலாச்சாரங்களும், படைப்பாற்றலும் இணைந்து புதிய வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் புதிய கண்காட்சி மையம் ஒன்றும், புதிய ஹோட்டல்களும் கட்டப்படும் என்றும் அந்நாட்டின் மெட்ரோ வசதிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத நிகழ்ச்சிகளுக்காக நாட்டின் உட்கட்டமைப்பு செலவுகளாக 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மொத்தம் 8.4 பில்லியன் செலவிடப்படும். ஆயினும், இந்த வர்த்தக நிகழ்ச்சி மூலம் 23 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று துபாய் அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.

வரும் 2015 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக கண்காட்சி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.