Home கலை உலகம் ஆர்யாவுடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதி

ஆர்யாவுடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதி

423
0
SHARE
Ad

Arya-and-shruti-hassan1-415x260-350x219

சென்னை, நவம்பர் 30- தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் ஜோடி சேர்கிறார்கள்.

படத்துக்கு வாடி வாசல் என பெயர் வைத்திருக்கிறார். அதிரடி மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.

#TamilSchoolmychoice

நான் அவன் இல்லை, அஞ்சாதே, மாப்பிள்ளை, போடா போடி ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார். வாடி வாசல் படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க உள்ளது.