Home உலகம் தமிழர்களின் இழிநிலையை ஆய்வு செய்ய ஐ.நா. குழுவினர் இலங்கை சென்றனர்

தமிழர்களின் இழிநிலையை ஆய்வு செய்ய ஐ.நா. குழுவினர் இலங்கை சென்றனர்

388
0
SHARE
Ad

6f46fe74-858e-4fad-854c-df0d02e9c8f8_S_secvpf

நியூயார்க், டிசம்பர்  3- இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய நவநீதம் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாதம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து விசாரணை நடத்தி அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டறிந்தார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த அவர் கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர், போரின்போது மாயமானவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக இலங்கை அரசு அமைத்த குழுவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவர்களை, ராணுவத்தினர் முன்கூட்டியே சந்தித்து மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். மேலும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், தொடர் அச்சுறுத்தல் என எதேச்சதிகாரத்தை நோக்கி இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதியில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களை அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

நான் ஐ.நா.வில் உள்ள தமிழ் பெண் புலி என்று கடந்த இலங்கையின் 3 அமைச்சர்கள் கூறுகின்றனர். நான் தமிழ் பெண் என்பதால், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதாக எனது நடுநிலை குறித்து கேள்வி எழுப்பினர். இது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது என்று கூறினார்.

இலங்கையில் கண்ட காட்சிகளையும் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சோகங்களையும் அறிக்கையாக தயாரித்து அதனை ஐ.நா. பொது செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இறுதிக்கட்டப் போரின் பாதிப்பால் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி சிரமப்படும் தமிழர்களை சந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்வோரின் மனித உரிமைகளுக்காக பாடுபடும் ஐ.நா.வின் சிறப்பு தூதர் சலோகா பெயானி நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்றார்.

சுமார் 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து தங்களது வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக வாடிக்கொண்டிருக்கும் தமிழர்களை சந்திக்க சலோகா பெயானி முடிவு செய்துள்ளார்.

யாழ்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் தமிழர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிவேன் என்று கொழும்பு செய்தியாளர்களிடம் சலோகா பெயானி கூறினார்.