Home இந்தியா ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல்

ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல்

504
0
SHARE
Ad

Tamil_News_large_863378

ஏற்காடு, டிசம்பர் 3- ஏற்காடு தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நான்கு நாட்களில் 78 இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் சென்ற கிராமங்களில் பொதுமக்களிடையே அ.தி.மு.க.,வினர் எவ்வளவு பணம் கொடுத்தனர் என கேட்டபோது, “2,000 ரூபாய்’ என, மக்கள் கோரஷாக பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.

தேர்தல் அதிகாரிகள் தலைமையில், ஸ்டாலினை பின் தொடர்ந்த வீடியோ குழுவும் பொதுமக்கள் பணம் வாங்கியதாக கூறியதை பதிவு செய்தனர்.தேர்தல் நேர்மையான முறையில் நடத்த 100 சதவீதம் முயற்சி எடுத்துள்ளோம்’ என, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் கூறினாலும் பணம் வினியோகம் நடந்துள்ளதை, தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.தேர்தல் ஆணையம், இவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.