Home கலை உலகம் பாடகராக அவதாரமெடுக்கும் விடிவி கணேஷ்!

பாடகராக அவதாரமெடுக்கும் விடிவி கணேஷ்!

495
0
SHARE
Ad

VTV-Ganesh

சென்னை, டிசம்பர் 5 – ஒளிப்பதிவாளரான கணேஷ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் அன்று முதல் விடிவி கணேஷ் என அழைக்கப்பட்டார். அப்படத்திற்கு பிறகு ‘வானம்’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘இங்க என்ன சொல்லுது’ என்ற பல படங்களில் நடித்து உள்ளார். இவருடைய வித்தியாசமான குரல் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலம். இந்த குரலே தமிழ் சினிமாவில் இவரை தனிமைப்படுத்தி காட்டுகிறது.

இந்த குரலுடன் இவர் தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தயாரித்து வரும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் பட்டாம்பூச்சி என்ற தத்துவப் பாடலை இவர் பாடியுள்ளார். இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இவர் பாடியது குறித்து தரண் கூறும்போது, விடிவி கணேஷ் கரகரப்பான தனித்துவமான குரல் வளத்தை பெற்றுள்ளார். இப்படத்தில் அவர் பாடிய பாடல் அவருடைய கதாபாத்திரத்தை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே, அந்த பாடலை இவர் பாடினால் சரியாக இருக்கும் என்பதால் இதில் பாட வைத்தோம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து விடிவி கணேஷ் கூறும்போது, நான் என்னுடைய வாழ்நாளில் சினிமாவில் பாடுவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் நிறைய பாடல்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். இதுதான் சினிமாவில் பாடுவதற்கு எனக்கு உதவியாக இருந்ததுடன் நம்பிக்கையும் அளித்துள்ளது என்றார். விடிவி கணேஷ் ஏற்கெனவே ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் பாடுவதாக இருந்தது. ஆனால், அந்த பாடல் பின்னால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.