பாரிஸ், டிசம்பர் 5– பிரான்சு நாட்டில் விபசார தொழில் கொடிகட்டி பறந்து வந்தது. இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதை கட்டுப்படுத்துவதற்காக முதன்முதலாக பிரான்சு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி விபசார தொழிலுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்ததாக மேல்சபையில் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகு சட்டம் அமுலுக்கு வரும்.
இந்த சட்டத்தின்படி விபசார தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஈடுபடுவர்களுக்கு அபராதம் பலமடங்கு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.