லண்டன், டிசம்பர் 5 – மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் பிரபலமான உடை ஒன்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு விட்டது. இந்த உடையில் வைரம், ஸ்படிகம், தங்கம், முத்து போன்றவை சேர்க்கப்பட்டிருந்தது. இந்த உடையை டேவிட், எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர்.
ஜேம்ஸ்பாண்டின் இன் தி லிவிங் டே லைட்ஸ் என்ற படம் வெளிவந்தபோது அதன் அறிமுக நிகழ்ச்சியில் டயானா கலந்து கொண்டார். அப்போது இந்த உடையை தான் உடுத்தினார்.
அதேபோல் பல நிகழ்ச்சிகளிலும் இந்த உடையை அணிந்து வந்துள்ளார். இந்த ஆடையை ஒருவர் 5 லட்சம் வெள்ளிக்கு ஏலம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.